உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கஞ்சா கடத்தியவர் சிக்கினார்

கஞ்சா கடத்தியவர் சிக்கினார்

திருத்தணி:ஆந்திர மாநிலத்தில் இருந்து, பொன்பாடி சோதனைச்சாவடி வழியாக, தமிழகத்திற்கு கஞ்சா, குட்கா, மதுபாட்டில்கள் கடத்தல் அதிகரித்து வருவதாக வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க்குக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.அவரது் உத்தரவின்படி, பொன்பாடி சோதனைச்சாவடியில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு ஈடுபட்டு, கடந்த மாதத்தில் மட்டும் போதைப் பொருட்கள் கடத்தி வந்த 50-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.இந்நிலையில் நேற்று, திருத்தணி, பொன்பாடி சோதனைச்சாவடி அருகே, ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களை போலீசார் தீவிர சோதனை செய்தனர். அப்போது திருப்பதியில் இருந்து, சென்னை நோக்கி வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.பஸ்சில் சந்தேகப்படும்படி இருந்த வாலிபரை பிடித்து போலீசார் அவரது உடைமைகளை சோதனை செய்த போது 6 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.பின், போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர், கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன், 23, என்பது தெரிந்தது. இதையடுத்து விக்னேஸ்வரனை கைது செயது, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ