சின்னம்பேடு சுடுகாடில் குப்பை, கழிவு குவியல்
ஆரணி:சோழவரம் ஒன்றியம், ஆரணி அடுத்த, சின்னம்பேடு கிராமத்தில், சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. சிறுவாபுரி கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் துாரத்தில், அகரம் நோக்கி செல்லும் சாலையோரம், சின்னம்பேடு சுடுகாடு அமைந்துள்ளது.அந்த சுடுகாட்டு வளாகம் முழுதும், சின்னம்பேடு ஊராட்சியினர், குப்பை, கழிவை கொண்டு வந்து கொட்டுகின்றனர். பார்க்கும் இடம் எங்கும் மலை போல் கழிவு, குப்பை குவித்திருப்பதால், சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது.குறிப்பாக இறுதி சடங்கிற்காக, சுடுகாட்டிற்கு வரும் மக்கள், மோசமான சூழலை சகித்துக் கொள்ள முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.சோழவரம் ஒன்றிய நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து, சின்னம்பேடு சுடுகாட்டில் குவிக்கப்பட்டுள்ள கழிவு, குப்பையை அகற்ற வேண்டும். எப்போதும், சுடுகாட்டு வளாகத்தை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என, கிராமத்தினரும், சிறுவாபுரி பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.