உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆரணி ஆற்றில் குப்பை கழிவு தொற்று நோய் பரவும் அபாயம்

ஆரணி ஆற்றில் குப்பை கழிவு தொற்று நோய் பரவும் அபாயம்

ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி, கொசஸ்தலை, கூவம் உள்ளிட்ட ஆறுகள் உள்ளன. இதில், ஆரணி ஆறு ஆந்திர மாநிலத்தில் உருவாகி, தமிழகத்தில் பயணியத்து, பழவேற்காடு அருகே கடலில் கலக்கிறது.இதில், ஆரணி ஆற்றை ஒட்டிய பகுதிகளில் சிலர், குப்பை உள்ளிட்ட கழிவுகளை கொட்டி வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் கோவில்களில் ஒன்றான பவானியம்மன் கோவிலை ஒட்டி செல்லும் ஆரணி ஆற்றில், அப்பகுதிவாசிகள் குப்பை, இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது.எனவே, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பெரியபாளையம் பவானியம்மன் கோவிலை ஒட்டியுள்ள மேம்பாலத்தின் கீழ் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை