உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையோரங்களில் குப்பைக்கழிவு நகரின் பொலிவு, சுகாதாரம் பாதிப்பு

சாலையோரங்களில் குப்பைக்கழிவு நகரின் பொலிவு, சுகாதாரம் பாதிப்பு

கும்மிடிப்பூண்டி:சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் முதல் ரயில்வே சுரங்கப்பாதை வரையிலான, 1 கி.மீ., சாலை, கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்டது.அந்த இடைப்பட்ட பகுதியில் உள்ள சாலையோரம், நகரின் பொலிவை பாதிக்கும் வகையில், எப்போதும் குப்பை கழிவுகள் சூழ்ந்து காணப்படும். இச்சாலையில் உள்ள ஈசா பெரிய ஏரிக்கரை மற்றும் ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில், 100 மீ., துார சாலையோரம், துர்நாற்றம் வீசும் குப்பை கழிவுகள் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது.கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம், சுற்றியுள்ள ஊராட்சி நிர்வாகங்கள், தனியார் தொழிற்சாலைகள், இறைச்சி கடையினர் என, தினமும் டன் கணக்கில் குப்பைக்கழிவுகள் குவித்து, எரித்து வருவதாக கும்மிடிப்பூண்டி மக்கள் தெரிவிக்கின்றனர்.இச்சாலையோர கழிவுகளால், அப்பகுதிகளில் எப்போதும் துர்நாற்றம் வீசுவதுடன், பன்றிகள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், கும்மிடிப்பூண்டி நகரின் பொலிவு மட்டுமின்றி, சுகாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.சுற்றுச்சூழலை காக்கும் நோக்கில் 'கழிவுகளை கொட்டாதீர்; மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், அப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைத்தும் பலனில்லை.எனவே, தேசிய நெடுஞ்சாலையோரம் குப்பைக்கழிவுகள் குவித்து எரிப்பவர் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இதற்கு தீர்வு காண முடியும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ