உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொது - நீரில் விழுந்த மின் கம்பி மிதித்ததில் மாணவன் பலி

பொது - நீரில் விழுந்த மின் கம்பி மிதித்ததில் மாணவன் பலி

ஆவடி:ஆவடி அடுத்த, பெருங்காவூரைச் சேர்ந்தவர் சரவணன், 40, இரண்டாவது மகன் திவாகர், 17; பூதுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்.நேற்று முன்தினம், ஆவடி அடுத்த பொத்துார், வள்ளியம்மன் நகரில் வசிக்கும் பாட்டி உமா வீட்டிற்கு தாய் தேவியுடன், திவாகர் சென்றார்.தான் வளர்த்து வந்த கோழியை பிடிப்பதற்காக, வீட்டின் அருகே இருந்த காலிமனைக்கு திவாகர் சென்றார்.அங்கு, ஒரு வீட்டின் மின் கம்பி அறுந்து, தேங்கி நின்ற மழைநீரில் ஏற்கனவே விழுந்து கிடந்துள்ளது. அதை அறியாமல், தண்ணீரில் கால் வைத்த திவாகர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் துாக்கி வீசப்பட்டு, உயிரிழந்தார்.தகவலறிந்து சென்ற ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், திவாகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை