உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மூச்சு திணறி சிறுமி பலி

மூச்சு திணறி சிறுமி பலி

ஆர்.கே.பேட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், சின்ன பர்கூரை சேர்ந்தவர் மருது மகள் சஞ்சனா, 10. ஆர்.கே.பேட்டை அடுத்த பாலாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக மருது குடும்பத்தினருடன் வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு மருதுவின் மகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. உடனடியாக சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு செல்ல 108 ஆம்புலன்சுக்காக காத்திருந்த போது, இதய துடிப்பு மேலும் குறைந்ததால், சஞ்சனா, சோளிங்கர் அரசு மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இது குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ