மேலும் செய்திகள்
இரு கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
30-Nov-2024
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ளது துராபள்ளம் பஜார். நேற்று நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர், அங்கிருந்து மூட்டையை தோள் மீது துாக்கிக்கொண்டு பஜார் பகுதியில், சாவகாசமாக நடந்து சென்றுள்ளார்.அப்போது, ரோந்து சென்ற ஆரம்பாக்கம் போலீஸ் எஸ்.ஐ., ஆறுமுகம், அந்த நபரிடம் 'மூட்டையில் என்ன?' என கேட்டுள்ளார். உடனே, அந்த நபர் மூட்டையை கீழே போட்டு, சாலையோர புதருக்குள் புகுந்து தப்பி ஓடினார்.மூட்டையில் முந்திரி பாக்கெட்டுகளுடன் மளிகை பொருட்கள் இருந்தன. இதையடுத்து, அப்பகுதி கடை உரிமையாளர்களை அழைத்து போலீசார் விசாரித்தனர். இதில், அடுத்தடுத்து நான்கு கடைகளின் பூட்டை உடைத்து திருடப்பட்டிருந்தது தெரிந்தது.இதில், தீபா, 45, என்பவரின் பாத்திரக்கடையில் 2,000 ரூபாய்; பிரகாஷ், 40, என்பவரின் டீக்கடையில், 500 ரூபாய்; ரியாஸ், 40, என்பவரின் மொபைல் போன் கடையில் 500 ரூபாய்; ஏழுமலை, 60, என்பவரின் மளிகை கடையில், 6,000 ரூபாய், முந்திரி, திராட்சை ஆகியவற்றை திருடியது தெரிய வந்தது.இதையடுத்து முந்திரி மூட்டை வியாபாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. திருட்டில் ஈடுபட்ட நபர் குறித்து, ஆரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
30-Nov-2024