உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு மருத்துவமனையில் குடிநீர் இல்லாமல் தவிப்பு

அரசு மருத்துவமனையில் குடிநீர் இல்லாமல் தவிப்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் குடிநீர் இல்லாததால், நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.திருவள்ளூர் அரசு மருத்துவமனை, ஜே.என்.சாலையில் செயல்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.இங்கு மகப்பேறு, பச்சிளங்குழந்தை பராமரிப்பு, அவசர சிகிச்சை, மூட்டு மாற்று சிகிச்சை, இதயவியல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ வசதி உள்ளது. நாளொன்றுக்கு, உள்நோயாளியாக 400 பேரும், 3,000 பேர் புறநோயாளியாக வந்து செல்கின்றனர். நவீன கட்டடம், மருத்துவ வசதி அளிக்கப்படும் இம்மருத்துவமனையில், குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவற்றில் குடிநீர் வருவதில்லை. இதனால், நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருவோர் குடிநீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.மேலும், மகப்பேறு பிரிவில் உள்ள குழந்தைகளை சுத்தம் செய்யவும், கர்ப்பிணியரும் குடிநீர் மற்றும் சூடான தண்ணீர் கிடைக்காமல், சாலையை கடந்து, கடைகளில் வாங்கும் அவலம் உள்ளது.எனவே, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருவோருக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என, நோயாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை