உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடி., -- மீஞ்சூர் இடையே புறநகர் ரயில்கள் ரத்து

கும்மிடி., -- மீஞ்சூர் இடையே புறநகர் ரயில்கள் ரத்து

பொன்னேரி:சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் உள்ள கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு, மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தரபங்கா நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்திற்கு உள்ளானது.இதில், 13 ரயில் பெட்டிகள் கவிழ்ந்து தண்டவாளங்கள் சேதம் அடைந்ததால், நேற்று முன்தினம் இரவு முதல், இந்த மார்க்கத்தில் ரயில் சேவை பாதித்தது.விபத்து நடந்த பகுதியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், நேற்று காலை முதல் கும்மிடிப்பூண்டி - மீஞ்சூர் இடையே புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு, மீஞ்சூர் - சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்பட்டன. இதையறியாமல் புறநகர் ரயிலை எதிர்பார்த்து பொன்னேரி, அனுப்பம்பட்டு ரயில் நிலையம் வந்த பயணியர் ஏமாற்றம் அடைந்தனர்.பின், அவர்கள் ஆட்டோ, பேருந்துகளில் மீஞ்சூர் சென்று அங்கிருந்து புறநகர் ரயிலில் பயணித்தனர். இதனால் எப்போதும் பரபரப்பாக இருக்கும் பொன்னேரி ரயில் நிலையம் நேற்று பயணியர் இன்றி வெறிச்சோடி கிடந்தது.கவரப்பேட்டை ரயில் விபத்தில் சிக்கியது போக எக்ஸ்பிரஸ் ரயிலின், எஞ்சிய பெட்டிகள் டீசல் என்ஜின் உதவியுடன் பொன்னேரி ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.கவரப்பேட்டையில் தண்டவாளம் சீரமைப்பு, விபத்தில் சிக்கிய பெட்டிகளை மீட்பது உள்ளிட்ட பணிகளுக்காக, பராமரிப்பு ரயில்கள் பொன்னேரி நிலையம் வந்து செல்கின்றன. அவற்றின் வாயிலாக சீரமைப்பு பணிகளுக்கான தளவாடங்கள் கொண்டு செல்லும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து புறநகர் ரயில்கள் இயக்கப்படவில்லை என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை