மேலும் செய்திகள்
195 பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்
22-Sep-2026
கும்மிடிப்பூண்டி: சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையே நடந்த தேசிய வில் வித்தை போட்டியில், கும்மிடிப்பூண்டி மாணவி தங்கம் வென்றார். ஹரியானா மாநிலம், பானிப்பட் நகரில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையே, தேசிய அளவிலான வில் வித்தை போட்டிகள், கடந்த மாதம் 21ம் தேதி முதல், 27ம் தேதி வரை நடந்தன. இந்த போட்டியில், கும்மிடிப்பூண்டி மதன்லால் கெமானி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் தவுஷிகா தஸ்னீம், 15, என்ற மாணவி பங்கேற்றார். இதில், 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் பங்கேற்ற அவர், தங்கப்பதக்கம் வென்றார். பயிற்சியாளர் கோகுல், சக மாணவ – மாணவியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் மாணவியை பாராட்டினர்.
22-Sep-2026