உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குட்கா பொருட்கள் பறிமுதல்; நெய்வேலி நபர் கைது

குட்கா பொருட்கள் பறிமுதல்; நெய்வேலி நபர் கைது

ஊத்துக்கோட்டை; பூண்டி அருகே நெய்வேலி கிராமத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதாக பென்னலுார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, ஒரு பெட்டிக் கடையை சோதனை செய்ததில், 108 பாக்கெட் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. மொத்தம் 6.700 கிலோ எடையுள்ள இதன் மதிப்பு 4,000 ரூபாய். இதுதொடர்பாக, கடையின் உரிமையாளர் சுரேஷ், 48, கைது செய்யப்பட்டு, ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ