உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குட்கா கடத்தியவர் கைது

குட்கா கடத்தியவர் கைது

ஊத்துக்கோட்டை:ஆந்திராவில் இருந்து, தமிழகத்திற்கு, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் கடத்துவதாக, எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது. எஸ்.பி.,சீனிவாசபெருமாள் உத்தரவின்படி, ஊத்துக்கோட்டை சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது அவ்வழியே வந்த காரை போலீசார் மடக்கினர். போலீசாரை கண்டதும் ஓட்டுனர் தப்பி ஓடினார். போலீசார் அவரை துரத்திச் சென்று பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், துாத்துக்குடி மாவட்டம், பழையகாயல் பகுதியைச் சேர்ந்த ஜெயபாலன், 40 என்பது தெரியவந்தது.காரை சோதனை செய்ததில், ஹான்ஸ் 89 கிலோ, விஐ 35, சுவாகத், 3, விமல், 165 என, மொத்தம், 292 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரிந்தது.ஊத்துக்கோட்டை போலீசார் ஜெயபாலனை கைது செய்து, ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். புகையிலைப் பொருட்கள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி