உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குட்கா கடத்தியவர் கைது

குட்கா கடத்தியவர் கைது

திருத்தணி:ஆந்திராவில் இருந்து குட்கா பொருட்கள் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக தமிழகத்திற்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு பிரிவு போலீசார் பொன்பாடி சோதனைச் சாவடியில் வாகன தணிக்கை நடத்தினர். அப்போது நகரியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த தனியார் பேருந்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது, சென்னை வில்லிவாக்கம் கருப்பாணி, 60 என்பவர் வைத்திருந்த பையில், 5 கிலோ குட்கா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். கருப்பாணியை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ