ஜிம்னாஸ்டிக் போட்டி நாளை துவக்கம்
சென்னை: பள்ளி கல்வித் துறை சார்பில், 2025 - 26ம் கல்வியாண்டிற்கான மாநில அளவிலான பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இப்போட்டி, சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நீச்சல் குள வளாகத்தில் நாளை துவங்குகிறது. இதில், மாநிலத்தின் 300க்கும் அதிகமான வீரர் - வீராங்கனையர், 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோர் என, மூன்று வயது பிரிவுகளில் போட்டியிடுகின்றனர். ஆடவர்களுக்கு டேபிள் வால்ட், பேலன்ஸ் பீம் உட்பட ஆறு போட்டிகளும், மகளிர்களுக்கு நான்கு போட்டிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.