உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / துணை மின்நிலைய வளாகத்தில் அபாயம்

துணை மின்நிலைய வளாகத்தில் அபாயம்

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம் அத்திமாஞ்சேரிபேட்டையில் துணை மின்நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து, பல்வேறு கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.அத்திமாஞ்சேரிபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தை ஒட்டி அமைந்துள்ள துணை மின்நிலைய வளாகத்தில், மின்கம்பத்தில் கொடிகள் படர்ந்துள்ளன.இதனால், மின்விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. இதே வளாகத்தில், மின் கட்டண வசூல் மையமும் செயல்பட்டு வருகிறது. இதனால், பகுதிவாசிகளும் இந்த வளாகத்திற்கு வந்து செல்கின்றனர்.துணை மின்நிலைய வளாகத்திலேயே மின்கம்பத்தில் கொடிகள் படர்ந்துள்ளதால், பகுதிவாசிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, மின்கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ