மேலும் செய்திகள்
மழையால் சாலை சேதம் சீரமைக்காததால் அதிருப்தி
04-Dec-2024
திருவள்ளூர்:திருப்பதி - திருநின்றவூர் தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் ஐ.சி.எம்.ஆர்., அருகில் பாலம் இணைப்பு பணி ஆமை வேகத்தில் நடப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திட்டம், திருவள்ளூரில் இருந்து, ஆந்திர மாநிலம், ரேணிகுண்டா வரை அமைக்கப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது.திருவள்ளூர் ஐ.சி.எம்.ஆர்., அருகில் இருந்து, திருநின்றவூர் வரை, மீதம் உள்ள பணி, 2022ல் 364 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கி நடைபெற்று வருகிறது.ஐ.சி.எம்.ஆர்., அருகில் இருந்து, பெரும்பாக்கம் ஏரி, காக்களூர், தண்ணீர்குளம் கடந்து, செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு வழியாக, திருநின்றவூர் வரை, 17.5 கி.மீட்டர் துாரம் சாலை பணி நடந்து வருகிறது.இச்சாலையில், ஏழு இடங்களில் மேம்பாலம் மற்றும் 17 இடங்களில் சிறு பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதில், திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலை குறுக்கே, ஐ.சி.எம்.ஆர்., அருகில் ஏற்கனவே உள்ள திருப்பதி நெடுஞ்சாலையில் இருந்து, திருநின்றவூர் வரை செல்லும் சாலையில், மேம்பாலம் இணைப்பு பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.இதனால், திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
04-Dec-2024