மேலும் செய்திகள்
கரியன் கேட் சாலை நடுவே இரும்பிலான தடுப்பு சேதம்
08-Sep-2025
திருத்தணி;திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், மழைநீர் வடிகால்வாய் சேதமடைந்துள்ளது. இதை சீரமைக்காமல் நெடுஞ்சாலை துறை யினர் அலட்சியம் காட்டி வருகின்றனர். திருத்தணி நகராட்சியில், திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், 24 மணி நேரமும் வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன. இச்சாலையோரம், திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் மழைநீர் வடிகால்வாய் அமைத்துள்ளனர். மாநில நெடுஞ்சாலையில் இருந்து சன்னிதி தெரு மற்றும் மேட்டுத் தெரு ஆகிய இடங்களுக்கு வாகனங்கள் திரும்பும் இடத்தில் உள்ள மழைநீர் கால்வாய் சேதடைந்துள்ளது. பல மாதங்களான நிலையில், இதுவரை நெடுஞ்சாலை துறையினர் கால்வாயை சீரமைக்காததால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே, சேதமடைந்த மழைநீர் கால்வாயை சீரமைக்க, திருவள்ளூர் கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
08-Sep-2025