உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வீட்டின் பூட்டு உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டு உடைத்து நகை, பணம் திருட்டு

ஊத்துக்கோட்டை,பூண்டி ஒன்றியம் போந்தவாக்கம் கிராமம், செட்டித் தெருவில் வசித்து வருபவர் ஜானகிராமன், 62. இரு நாட்களுக்கு முன், குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு சென்றார்.நேற்று வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 12 சவரன் நகை, 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 60,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது.இதுகுறித்து ஜானகிராமன், பென்னலுார்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்குப் பதிந்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை