உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாற்றுத்திறனாளிகள் விபரம் வீடுதோறும் கணக்கெடுப்பு

மாற்றுத்திறனாளிகள் விபரம் வீடுதோறும் கணக்கெடுப்பு

திருவள்ளூர் :மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சேவை வழங்குவதற்காக, வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:உலக வங்கி நிதியுதவியுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம் சார்ந்த பராமரிப்பு, மறுவாழ்வு சேவைகள், நடமாடும் சிகிச்சை வாகனம் வாயிலாக வழங்கும் நோக்கத்துடன், திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில், 19 இடங்களில் ஓரிட சேவை மையம் அமைக்கப்பட உள்ளது.அமர்சேவா சங்க தொண்டு நிறுவனம் வாயிலாக, ஒவ்வொரு வட்டாரத்திலும் 10 முன்கள பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு, மாவட்டம் முழுதும் வீடு வீடாகச் சென்று, மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செய்யப்பட உள்ளனர்.இதற்கு, மாற்றுத்திறனாளிகளின் தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களும் சரிபார்ப்பதற்காக முன்கள பணியாளர்கள் கேட்டால், அதை காண்பிக்க வேண்டும்.மாற்றுத்திறனாளிகள் அல்லாத வீடுகளில் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டு மட்டும் வழங்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 044 - -2766 2985 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ