உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கொத்தடிமை தொழிலில் இருந்து மீட்கப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா ஒதுக்கீடு

கொத்தடிமை தொழிலில் இருந்து மீட்கப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா ஒதுக்கீடு

சென்னை:திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், கொத்தடிமை தொழில் முறையில் இருந்து மீட்கப்பட்ட, 12 குடும்பங்கள் உட்பட 34 குடும்பத்தினருக்கு, வீட்டு மனை பட்டா மற்றும் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து மீட்கப்படும் கொத்தடிமை தொழிலாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான மறுவாழ்வு, கல்வி மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை, தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு மீட்கப்படும் நபர்கள் அடையாளம் காணப்படும்பட்சத்தில், அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் வீட்டுமனை பட்டா, இலவச வீடுகளை அரசு வழங்கி வருகிறது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியைச் சேர்ந்த சரோஜா - மணி, மங்கம்மாள் - சுப்பிரமணி தம்பதி உள்ளிட்ட, கொத்தடிமை தொழிலில் இருந்து மீட்கப்பட்ட 12 குடும்பங்கள் மற்றும் இருளர் சமூகத்தைச் சேர்ந்த 22 குடும்பத்தினருக்கு, திருவள்ளூர் மாவட்டம், முருங்கப்பட்டு பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கு றித்து, விடுவிக்கப்பட்ட கொத்தடிமை மக்களுக்கான மறுவாழ்வு நலச்சங்கத்தின் தலைவர் வினோத் கூறியதாவது: கடந்த 2005 முதல், கொத்தடிமை தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கையை, அரசுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறோம். இதுவரை, 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை மீட்டுள்ளோம். அந்த வகையில், திருவள்ளூரில் பிறந்து, ஆந்திராவில் கொத்தடிமையாக வேலை செய்து வந்த நான்கு குடும்பத்தினர், கடந்த 2007ல் மீட்கப்பட்டனர். இவர்களுக்கு முன் மீட்கப்பட்ட எட்டு குடும்பத்தினர் மற்றும் திருவள்ளூரைச் சேர்ந்த நிலமற்ற 22 இருளர் குடும்பங்களுடன் சேர்த்து, 34 குடும்பத்தினருக்கு கடந்த 2023ல் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால், நிலம் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பின், 34 குடும்பங்களுக்கு, திருவள்ளூர் மாவட்டம், முருங்கப்பட்டு பகுதியில் நிலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில், எட்டு குடும்பத்தினருக்கு இல வச வீடும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை