மேலும் செய்திகள்
புதுமாப்பிள்ளை விபத்தில் பலி
08-Feb-2025
கும்மிடிப்பூண்டி:அம்பத்துார் பகுதியில் வசித்தவர் செல்வராஜ், 49. தனியார் நிறுவன மேலாளர். அவரது மனைவி சரசு, 45; சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், இருவரும், கவரைப்பேட்டையில் இருந்து, சென்னை நோக்கி, 'ராயல் என்பீல்ட் புல்லட்' டூ- - வீலரில் சென்றுக் கொண்டிருந்தனர்.அப்போது, முன்னால் சென்றுக் கொண்டிருந்த லாரியின் பின்னால் டூ - -வீலர் மோதியது. இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே செல்வராஜ் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது மனைவி சரசு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
08-Feb-2025