உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர், செங்கல்பட்டில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

திருவள்ளூர், செங்கல்பட்டில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

திருவள்ளூர், - திருவள்ளூர், செங்கல்பட்டில், நேற்று விநாயகர் சிலைகள் ஏரி மற்றும் கடலில் கரைக்கப்பட்டன. திருவள்ளூர், திருப்பாச்சூர், வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு, மணவாளநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து எடுத்து வரப்பட்ட 25க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், ஆயில் மில் அருகே வைக்கப்பட்டன. பின், விநாயகர் சிலைகள் ஜே.என்.சாலை, ராஜாஜி சாலை, பஜார் வீதி வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காக்களூர் ஏரியில் கரைக்கப்பட்டன. பாதுகாப்பு பணியில், 300க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். கடம்பத்துார், மப்பேடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், அப்பகுதிகளில் உள்ள ஏரிகளில் கரைக்கப்பட்டன. செங்கல்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27ம் தேதி நாடு முழுதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பொது இடங்கள், கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் மற்றும் ஹிந்து இயக்கங்கள் சார்பாக பிரமாண்டமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மூன்றாம் நாளான நேற்று செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், கூவத்துார், பவுஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த 46 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கடப்பாக்கம், கடலுார் குப்பம், தழுதாளிகுப்பம் பகுதி கடலில் போலீஸ் பாதுகாப்புடன் விசர்ஜனம் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ