உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கால்வாய் நடுவே மின்கம்பம் திருத்தணியில் தான் இந்த அவலம் ஐந்து ஆண்டுகளாக குடியிருப்புவாசிகள் திக்... திக்

கால்வாய் நடுவே மின்கம்பம் திருத்தணியில் தான் இந்த அவலம் ஐந்து ஆண்டுகளாக குடியிருப்புவாசிகள் திக்... திக்

திருத்தணி:திருத்தணி நகராட்சி, 16வது வார்டு லட்சுமணன் தெருவில், 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், இந்த தெருவில் உள்ள தனியார் பள்ளிக்கு, தினமும் 100க்கு மேற்பட்ட மாணவர்கள் சென்று வருகின்றனர்.ஐந்து ஆண்டுகளுக்கு முன் மழைநீர் வடிகால்வாய் மற்றும் ஒரு சிறுபாலம் புதிதாக அமைக்கப்பட்டது. மழைநீர் கால்வாய் நடுவே மின்கம்பம் இருந்தும், அப்புறப்படுத்தாமல் நகராட்சி நிர்வாகம் கால்வாய் அமைத்தது. இந்த மின்கம்பத்தில் இருந்து, 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.மேலும், கால்வாய் வழியாக செல்லும் மழைநீர் மற்றும் கழிவுநீரால் மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்தும், சிமென்ட் தளம் பெயர்ந்து இரும்பு கம்பிகள் துருப்பிடித்து உள்ளன.பலத்த காற்று அடித்தால், மின்கம்பம் உடைந்து வீடுகள் மீது விழுந்து பெரிய அளவில் மின்விபத்து ஏற்படும். எனவே, அசம்பாவிதம் நடக்கும் முன், மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, புதிய மின்கம்பம் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து திருத்தணி மின்வாரிய இளநிலை பொறியாளர் தமிழரசன் கூறியதாவது:கால்வாய் அமைக்கும் போது எங்களுக்கு எந்த தகவலும் நகராட்சி நிர்வாகம் தெரிவிக்கவில்லை. அப்போதே தெரிவித்திருந்தால் மின்கம்பத்தை மாற்றி அமைத்திருப்போம்.கழிவுநீர் தொடர்ந்து மின்கம்பம் வழியாக செல்வதால், மின்கம்பம் பழுதடைந்துள்ளது. மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து, மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை