உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூரில் குரங்குகள் தொல்லை குடியிருப்புவாசிகள் கடும் அவஸ்தை

திருவள்ளூரில் குரங்குகள் தொல்லை குடியிருப்புவாசிகள் கடும் அவஸ்தை

திருவள்ளூர்:திருவள்ளூர் பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக இருப்பதால், அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருவள்ளூர் நகராட்சியை ஒட்டி, பூண்டி காப்புக்காடு அமைந்துள்ளது. இங்கிருந்து, குரங்குகள் உணவு, குடிநீர் தேவைக்காக திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம், ஜே.என்.சாலை தலைமை தபால் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டுள்ளன.மேலும், இங்கிருந்து அருகில் உள்ள டோல்கேட், ஜவஹர் நகர், பேருந்து நிலையம் பகுதி, லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் குரங்குகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன.ஜன்னல் வழியாக வீடுகளுக்குள் குரங்குகள் புகுந்து விடுவதால், குழந்தைகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 1, 2, 11 மற்றும் 12வது வார்டு கவுன்சிலர்கள், குரங்குகளை கட்டுப்படுத்த வேண்டும் நகர்மன்ற கூட்டத்தில் புகார் தெரிவித்து வந்தனர். மேலும், பொதுமக்களும் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தனர்.இதையடுத்து, திருவள்ளூர் நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து, காப்பு காட்டில் விடுமாறு நகராட்சி நிர்வாகம், திருவள்ளூர் வனத்துறைக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ