ரூ.2.57 கோடியில் 5 மருத்துவ கட்டடங்கள் திறந்து வைப்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பூந்தமல்லி, திருநின்றவூர், பெருமாள்பட்டு ஆகிய பகுதிகளில், 2.57 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, 5 மருத்துவ கட்டடங்கள் திறப்பு விழா, பாரிவாக்கத்தில் நேற்று நடந்தது.இதில், கைத்தறி துறை அமைச்சர் காந்தி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு, கட்டடங்களை திறந்து வைத்தனர்.தொடர்ந்து, கர்ப்பிணி பெண்களுக்கு மருந்து பெட்டகம், அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணம், பள்ளி மாணவர்களுக்கு கண் கண்ணாடி, அரசு கல்லுாரிக்கு செல்லும் மாணவர்களுக்கு வாகனம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.நிகழ்ச்சியில், திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர், எம்.எல்.ஏ.,க்கள் நாசர், கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.