மேலும் செய்திகள்
வாடகைக்கு வருகிறது 5,000 எலக்ட்ரிக் 'டூ - வீலர்'
07-Aug-2025
திருவாலங்காடு, எலக்ட்ரிக் பைக் ஓட்டினால், ஹெல்மெட் அணிவது மற்றும் ஆவணங்கள் வைத்திருப்பது கட்டாயம் என, வட்டார போக்குவரத்து துறை அதிகாரி அறிவுறுத்தியுள்ளார். சுற்றுச்சூழலுக்கும், எரிபொருள் செலவை மிச்சப்படுத்தவும் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுகிறது. திருவாலங்காடு, திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில், எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக, ஒவ்வொரு நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்குகின்றன. இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில், டீலர்களும் சில சலுகைகளை அளிக்கின்றனர். அதேநேரம், விற்பனையை மட்டுமே கருத்தில் கொள்ளும் சிலர், 'எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஆர்.சி., மற்றும் லைசென்ஸ் தேவையில்லை. 'ஹெல்மெட்' அணிய வேண்டாம்' என தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அதிகாரி கூறியதாவது: மோட்டார் வாகன வழிகாட்டுதல்களின்படி, 250 வாட்ஸ் வரை பேட்டரி திறன் கொண்ட எலக்ட்ரிக் பைக், ஒரு மணி நேரத்திற்கு 25 கி.மீ.,க்கும் குறைவான ஸ்பீடு மோட்டார் போன்றவை வாகனமாக கருதப்படாது. ஆனால், எந்த வகையான எலக்ட்ரிக் பைக் ஓட்டினாலும் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். அதேபோல போக்குவரத்து விதிப்படி, ஹெல்மெட் அணிய வேண்டும். ஆர்.சி., புக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இதுகுறித்து, எலக்ட்ரிக் வாகன டீலர்களிடம் அறிவுறுத்தி வருகிறோம். இதை, வாகன ஓட்டுநர்களும் கடைப்பிடிக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
07-Aug-2025