உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கு ரூ.6 கோடியில் உள்கட்டமைப்பு

பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கு ரூ.6 கோடியில் உள்கட்டமைப்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், அழிவின் விழிம்பில் உள்ள பண்டைய பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நடப்பு 2025 - 26ம் ஆண்டு அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு வசதி மேற்கொள்ள, 6.17 கோடி ரூபாய் நிதியை, தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதியில், பழங்குடியினர் வசிக்கும் ஒன்றியங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சாலை, மின்சாரம், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பழங்குடியினர் வசிக்கும் 10 ஒன்றியங்களில், பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளில், 88 பணிகள் செயல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையினர் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில், நடப்பு 2025 - 26ம் ஆண்டில், பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளில், அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த, பழங்குடியினர் நல ஆணையரகம் வாயிலாக, 6.17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில், மாவட்டத்தில் பழங்குடியினர் வசிக்கும் திருவள்ளூர், எல்லாபுரம் ஒன்றியங்களில், தலா 8, பள்ளிப்பட்டு - 2, மீஞ்சூர் - 6, கும்மிடிப்பூண்டி - 14, திருத்தணி - 16, திருவாலங்காடு - 2, ஆர்.கே.பேட்டை - 11, பூண்டி - 6, கடம்பத்துார் - 15 என, மொத்தம் 88 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக தயாரிக்கப்பட்ட ஒப்பந்த புள்ளியில், பணிகளின் மதிப்பீடு, 6.14 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அப்பணிகளுக்கு, வரும் 12ம் தேதி ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், பொது ஒப்பந்தம் நடைபெற உள்ளது. ஒப்பந்தம் எடுத்த பின், பணிகள் துவக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை