உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி

மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி

திருத்தணி,:அரசு பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பு படிக்கும் மாணவர்கள், உயர்கல்விக்கு செல்வதற்கும், போட்டித் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், மாதிரி பள்ளிகளில் புத்தாக்க பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் உயர் தொழில் நுட்ப ஆய்வக அலுவலர்கள் மூலம் அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அந்த வகையில் நேற்று திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன், அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம், மத்துார் அரசு மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பரந்தாமன் மற்றும் தொழில் நுட்ப ஆய்வக அலுவலர் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சியில், திருத்தணி வட்டார அளவில், 5 பள்ளிகளில் இருந்து, 75க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !