உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சமத்துவ சுடுகாடு அமைக்க வலியுறுத்தல்

சமத்துவ சுடுகாடு அமைக்க வலியுறுத்தல்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியில் தக்கோலம் சாலை, இஸ்ரேல் நகர், சாய்பாபா நகர் என 10க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஹிந்து, முஸ்லீம், கிறித்தவர்கள் என அனைத்து மதத்தினரும் வசிக்கின்றனர்.இப்பகுதிவாசிகள் இறந்தவர்களின் உடலை திருவாலங்காடு ரயில் நிலைய தண்டவாளத்தை கடந்து சின்னம்மாபேட்டை ஓடையில் அமைந்துள்ள சுடுகாடில் அடக்கம் செய்து வருகின்றனர்.தண்டவாளத்தை கடந்து இறந்தவர்களின் உடலை கொண்டு செல்லும்போது இடையூறுகள் இருப்பதாகவும், விபத்து அபாயம் உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே தங்கள் வசிக்கும் பகுதியில் சமத்துவ சுடுகாடு ஏற்படுத்தி தர, திருத்தணி தாலுகா வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என. அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !