உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நகராட்சியில் ஆடு தொட்டி அமைக்க வலியுறுத்தல்

நகராட்சியில் ஆடு தொட்டி அமைக்க வலியுறுத்தல்

பொன்னேரி, : பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில், 40க்கும் அதிகமான இறைச்சி கடைகள் உள்ளன. வழக்கமாக ஆடுகளை அதற்கென உள்ள ஆடுதொட்டி நிலையத்திற்கு கொண்டு சென்று, சுகாதார ஆய்வாளரின், தகுதி சான்று பெறவேண்டும். பின், அங்கேயே ஆட்டை அறுத்து சுத்தம் செய்து, நகராட்சி முத்திரை பெற்று, விற்பனை செய்ய கொண்டு செல்ல வேண்டும். மேலும் இறைச்சி கழிவுகளும் அங்கேயே குவித்து வைத்து சுகாதாரமான முறையில் கையாள வேண்டும்.ஆனால், பொன்னேரி நகராட்சியில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. இதற்கொன ஆடுதொட்டி அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் ஆட்டிறைச்சி தரம் கேள்விக்குறியாகி உள்ளது.மேலும், ஆட்டிறைச்சி கழிவுகள் முறையாக அப்புறப்படுத்துவதில்லை. இவை நீர்நிலைகளில் கொண்டு கொட்டப்படுகிறது. நீர்நிலைகளில் இறைச்சி கழிவுகள் கலந்து பாழாகிறது.பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே, இருந்த ஆடு தொட்டி கட்டடம், பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்கு இடித்து அகற்றப்பட்டது. அங்கு புதிய ஆடு தொட்டி கட்டடம் அமைக்கப்படாமல் உள்ளது.நகராட்சி நிர்வாகம் ஆடுதொட்டிக்கான கட்டடம் அமைத்து, சுகாதாரமான ஆடுகளை விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், இறைச்சி கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ