உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆர்.கே.பேட்டை பகுதிகளில் வெல்லம் தயாரிப்பு தீவிரம்

ஆர்.கே.பேட்டை பகுதிகளில் வெல்லம் தயாரிப்பு தீவிரம்

ஆர்.கே.பேட்டை:தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இனிப்பு தயாரிக்க தேவையான வெல்லம் உற்பத்தி ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில் முழுவீச்சில் நடந்து வருகிறது. ஆர்.கே.பேட்டை அடுத்த தியாகாபுரம், ஜதனநகரம், ஜனகராஜகுப்பம் உள்ளிட்ட பகுதியில் கரும்பு சாகுபடி பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் விளையும் கரும்பு, வெல்லம் தயாரிக்க ஏதுவாக உள்ளது. இதனால், இங்குள்ள கரும்பு விவசாயிகள், அறுவடை செய்யப்படும் கரும்புகளை சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பதை காட்டிலும், வெல்லம் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கரும்பு தோட்டத்தின் ஒரு பகுதியில், வெல்லம் ஆலைகளை நிறுவி, அங்கேயே சாறு பிழிந்து வெல்லம் உற்பத்தி செய்கின்றனர்.இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை, வியாபாரிகள் முன்பணம் செலுத்தி வாங்கி செல்கின்றனர். விற்பனை வாய்ப்பு சிறப்பாக உள்ளதாலும், முன்கூட்டியே பணம் கிடைப்பதாலும், கரும்பு விவசாயிகளுக்கு, வெல்லம் தயாரிப்பு இனிக்கிறது.ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில் விளையும் கரும்பு, வெல்லம் தயாரிக்க ஏதுவாக இருப்பது கூடுதல் சிறப்பு.தியாகாபுரம், ஜனகராஜகுப்பம், கதனநகரம் சுற்றுப்பகுதியில் ஏராளமான வெல்லம் தயாரிப்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகையை ஒட்டி இரவு பகலாக வெல்லம் தயாரிப்பு ஆலைகள் செயல்பட்டு வருவதால், இந்த பகுதியில் வயல்வெளி எங்கும் வெல்லப்பாகு மணக்கிறது. தற்போது முதல் தரமான வெல்லம் ஒரு கிலோ 70 ரூபாய்கு கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை