கூட்டுறவு துறை உதவியாளர் பணிக்கு நாளை நேர்காணல்
திருவள்ளூர்: கூட்டுறவு துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணி தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு, நாளை நேர்காணல் நடக்கிறது. திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு துறையில், கூட்டுறவு சங்கம் மற்றும் வங்கி கிளைகளில், 80 உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பம் பெறப்பட்டு, கடந்த அக்., 1ம் தேதி எழுத்து தேர்வு நடந்தது. தேர்வு முடிவு, கடந்த 17ம் தேதி திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, எழுத்து தேர்வில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, நாளை நேர்முகத் தேர்வு, திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மண்டல இணை பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. நேர்முக தேர்வுக்கான அனுமதிச் சீட்டை, www.drbtvl.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 73387 49121 என்ற மொபைல் போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.