மேலும் செய்திகள்
சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு பணி துவக்கம்
1 minutes ago
தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
1 minutes ago
இன்று இனிதாக ... (25.12.2025) திருவள்ளூர்
2 minutes ago
அரசு பள்ளியில் நுழைந்த மான்
24-Dec-2025
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், 26 காலி பணியிடங்களுக்கு, கடந்த 12ம் தேதி முதல் நடந்த நேர்காணல் நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று, ஒரு சித்த மருத்துவர் பணிக்கு, 61 பேர் விண்ணப்பித்திருந்தனர். திருத்தணி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் இரவு காவலர், மிருதங்கம், புஜங்கம் சித்த மருத்துவர், செவிலியர், ஓட்டுநர், நாதஸ்வரம், துாய்மை பணியாளர் உள்ளிட்ட 26 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு, மொத்தம் 1,590 பேர் விண்ணப்பித்தனர். இவர் களுக்கான நேர்காணல், கடந்த 12ம் தேதி துவங்கியது. அதன்பின், 15, 17, 22, 23, 24 மற்றும் நேற்று என, மொத்தம் ஆறு நாட்கள் நடந்தது. நேற்று, ஒரு சித்த மருத்துவர் பணிக்கு நேர்காணல் நடந் தது. இதில், 61 பேர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று காலை 9:30 மணிக்கு, திருவள்ளூர் மண்டல இணை ஆணையர் அனிதா, முருகன் கோவில் இணை ஆணையர் ரமணி மற்றும் இரு சித்த அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் நடந்தது. ஜனவரியில் தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்து, காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 minutes ago
1 minutes ago
2 minutes ago
24-Dec-2025