உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 220 பயனாளிகளுக்கு ரேஷன் கார்டு வழங்கல்

220 பயனாளிகளுக்கு ரேஷன் கார்டு வழங்கல்

திருத்தணி:திருத்தணி தாலுகாவில், புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பத்தவர்கள் பல மாதங்களாக ரேஷன் கார்டுக்காக காத்திருந்தனர். இந்நிலையில், கலெக்டர் பிரதாப் உத்தரவின்படி, புதிய ரேஷன் கார்டுகள் நேற்று முன்தினம் முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இது குறித்து, திருத்தணி வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் கூறியதாவது:கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல், டிசம்பர் மாதம் வரை புதிய ரேஷன் கார்டுகள் கோரி மொத்தம், 914 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில், ஜூன், ஜூலை மாதத்தில் விண்ணப்பித்த, 314 பேருக்கு கடந்த மாதம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன.ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் வரை விண்ணப்பித்த, 220 பேருக்கும் புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்கப்பட்டு, நேற்று முன்தினம் அலுவலகத்திற்கு வந்தது. தொடர்ந்து, பயனாளிகளுக்கு தகவல் தெரிவித்து, 220 பேருக்கும் புதிய கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் விண்ணப்பித்த, 380 பேருக்கு இம்மாதத்திற்குள் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும்.இதுதவிர, மிஸ்சிங் கார்டுகள், முகவரி திருத்தம், பெயர் சேர்த்தல், நீக்கல் போன்ற கார்டுகள் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு தபால் வாயிலாக அவர்களுக்கு வீட்டு விலாசத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை