உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பிரதமர் கவுரவ உதவித்தொகை பெற அடையாள எண் பெறுவது கட்டாயம்

பிரதமர் கவுரவ உதவித்தொகை பெற அடையாள எண் பெறுவது கட்டாயம்

திருவள்ளூர், ''பிரதமரின் கவுரவ உதவி தொகையை தொடர்ந்து பெற, விவசாயிகள் வரும் 31க்குள் தனி அடையாள எண் பெற கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்,'' என கலெக்டர் அறிவித்துள்ளார்.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக, பிரதமரின் கவுரவ உதவித்தொகை, மானியத்தில் சொட்டு நீர் பாசன கருவிகள், வேளாண் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை மத்திய -மாநில அரசுகள் வழங்கி வருகிறது.பிரதமரின் கவுரவ உதவித்தொகை விவசாயி அல்லாதவர்களுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக, இணையவழியில் பதிவு செய்து விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கி வருகிறது.ஒவ்வொரு விவசாயிகளுக்கும், தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு, வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் அவர்களின் சுய விபரங்களை பதிவேற்றம் செய்யும் பணியை வேளாண் துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.அனைத்து பொது சேவை மையங்களிலும் இலவசமாக பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதமரின் கவுரவ உதவித்தொகை பெறும், 41,973 விவசாயிகளில், இதுவரை 16,250 பேர் மட்டுமே அடையாள எண் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 25,723 விவசாயிகள் உடனடியாக கள அலுவலர்களையோ அல்லது பொது சேவை மையங்களையோ தொடர்பு கொண்டு, தனி எண் பெற பதிவு செய்ய வேண்டும். தனி அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே ஊக்கத்தொகை ஏப்ரலில் விடுவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி