மேலும் செய்திகள்
பொன்னியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல்
06-May-2025
திருத்தணி:திருத்தணி நகரம் காந்தி நகர் பகுதியில் கங்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், ஜாத்திரை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஜாத்திரை விழா துவங்கியது. அம்மன் கோவில் வளாகத்தில் கூழ் வார்த்தல் மற்றும் மூலவர் அம்மனுக்கு மஞ்சள்நீர் அபிஷேகம் நடந்தது.நேற்று காலை, 7:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை, 9:00 மணிக்கு கூழ்வார்த்தல் மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துக் கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிப்பட்டனர். மாலை, 6:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில். பூங்கரகத்துடன் திருத்தணி நகரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 10:00 மணிக்கு கும்பம் கொட்டும் நிகழ்ச்சியும், நாடகமும் நடந்தது. பள்ளிப்பட்டு
பள்ளிப்பட்டு பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது கொள்ளாபுரியம்மன் கோவில். கொள்ளாபுரியம்மனின் சகோதரிகள் எனப்படும் செல்லாலம்மன் மற்றும் நிப்புலபோலேரம்மன் கோவில், பள்ளிப்பட்டு அடுத்த ஈச்சம்பாடி கிராமத்தில் அமைந்துள்ளது. கொள்ளாபுரியம்மன் கோவில் ஜாத்திரை திருவிழா அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக, ஈச்சம்பாடி செல்லாலம்மன் மற்றும் நிப்புலபோலேரம்மன் கோவிலில் நேற்று ஜாத்திரை திருவிழா கொண்டாடப்பட்டது. இதற்காக பள்ளிப்பட்டில் இருந்து திரளான பெண்கள் நேற்று பொங்கல் வைக்க ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். மாலை 5:00 மணியளவில், கோவில் வளாகத்தில் திரளான பெண்கள், பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் இட்டனர்.
06-May-2025