உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி சி.ஹெச்.,சில் மூதாட்டியிடம் நகை திருட்டு

திருத்தணி சி.ஹெச்.,சில் மூதாட்டியிடம் நகை திருட்டு

திருத்தணி:திருத்தணி அடுத்த மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சாரதா, 90. இவர் நேற்று காலை தன் சகோதரர் நாராயணன் என்பவருடன் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு வந்தார். புறநோயாளியாக மருத்துவரிடம் சிகிச்சை பெற்றார். அப்போது மருத்துவர், மூதாட்டியிடம், எக்ஸ்ரே எடுத்து வருமாறு அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, சாரதாவை அவரது சகோதாரர் எக்ஸ்ரே அறை முன் உட்கார வைத்துவிட்டு, மாத்திரைகள் வாங்குவதற்கு சென்றார்.அந்த நேரத்தில் மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம், ' எக்ஸ்ரே எடுக்க உள்ளதால் காதில் உள்ள கம்மல், மூக்குத்தி ஆகியவை கழற்ற வேண்டும்' என கூறினார். கழற்றிய பின் நான் பத்திரமாக வைத்திருக்கிறேன், எக்ஸ்ரே அறை செல்லுங்கள் கூறினார். சாரதா அறைக்குள் நுழைந்ததும், மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடினர். அரை சவரன் கம்மல், அரை சவரன் மூக்குத்தி மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். இது குறித்து சாரதா கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் அரசு மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா வாயிலாக பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை