உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்கக்கூடாது கார்த்திகேயபுரத்தினர் எம்.எல்.ஏ.,விடம் மனு

நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்கக்கூடாது கார்த்திகேயபுரத்தினர் எம்.எல்.ஏ.,விடம் மனு

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், கார்த்திகேயபுரம் ஊராட்சியை, கடந்த வாரம் திருத்தணி நகராட்சியுடன் இணைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியினர் மற்றும், 700 பெண்கள், நுாறு நாள் அட்டையுடன் நகராட்சியுடன் ஊராட்சி இணைக்கக் கூடாது என, திருத்தணி- அரக்கோணம் சாலையோரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மேலும், ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிறைவு கவுன்சிலர்கள் கூட்டத்திலும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில் கார்த்திகேயபுரம் ஊராட்சியைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட ஆண்கள், திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரன் அலுவலகத்திற்கு நேரில் சென்று, கோரிக்கை மனு கொடுத்தனர்.மேலும், நகராட்சியுடன், எங்கள் ஊராட்சியைச் சேர்ப்பதால் நுாறு நாள் வேலை பறிபோகும், வீட்டு வரி, குடிநீர் கட்டணம் உயரும். ஊராட்சியில் வசிப்பவர்கள் அனைவரும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், கூலித் தொழிலாளிகள் என்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.ஆகையால், நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்கக்கூடாது என, எம்.எல்.ஏ.,விடம் மக்கள் தெரிவித்தனர்.மனுவை பெற்ற எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி