உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கேரள லாட்டரி விற்பனை சென்னையில் அமோகம்

கேரள லாட்டரி விற்பனை சென்னையில் அமோகம்

அம்பத்துார்:அம்பத்துார் ஓ.டி., பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை ஜோராக நடந்து வருகிறது.கேரளாவில் இருந்து வரும் ஆம்னி பேருந்து ஓட்டுனர்கள் கேரள லாட்டரிகள் வாங்கி வந்து, சென்னையில் விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சமீபத்திய ஓணம் மற்றும் நவராத்திரி பம்பரை கடந்து, தற்போது தீபாவளி பம்பர் லாட்டரி விற்பனை களை கட்டி வருகிறது. கேரளாவில் 100 அல்லது 200 ரூபாய்க்கு விற்கப்படும் லாட்டரி சீட்டுகள், இங்கு 100 - 150 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது.மேலும், ஒரு நம்பர் லாட்டரியையும் சத்தமே இல்லாமல், அம்பத்துார் மார்க்கெட் மற்றும் பேருந்து நிலையங்களில் விற்று வருகின்றனர். 'சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவோரை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி