மேலும் செய்திகள்
நாட்டு வெடிகுண்டு வீச்சு: வாலிபர் படுகாயம்
20-Aug-2025
திருவள்ளூர்:பைக் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில், கேரளா வாலிபர் படுகாயமடைந்தார். கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் கெவின், 23. இவர், கடம்பத்துார் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள 'சாந்தோம் சினேகதிரம்' என்ற முதியோர் இல்லத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 5ம் தேதி இரவு, 'ஹோண்டா யுனிகார்ன்' பைக்கில் முதியோர் இல்லத்திற்கு மருந்து வாங்க திருவள்ளூருக்கு சென்றார். அப்போது, காமராஜர் சிலை அருகே, பின்னால் வந்த டிப்பர் லாரி பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த கெவின், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரையடுத்து, திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
20-Aug-2025