உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வினாடிக்கு 130 கன அடி கிருஷ்ணா நீர் வருகிறது

வினாடிக்கு 130 கன அடி கிருஷ்ணா நீர் வருகிறது

ஊத்துக்கோட்டை:சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு குறைந்தது வந்தது. இதனால், கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி, கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்டை அடைந்தது.கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு, 800 கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில், தமிழக எல்லையில் 129 கன அடி நீர் வந்தது. நேற்று காலை 4:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு 130 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி