மேலும் செய்திகள்
பாழடைந்த பள்ளி கட்டடம் இடித்து அகற்ற கோரிக்கை
12-Feb-2025
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், கிருஷ்ணசமுத்திரம் காலனியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக் கட்டடம், 25 ஆண்டுகளுக்கு முன், கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டது. இக்கட்டடத்தை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் கட்டடத்தின் மேற்பகுதியில் விரிசல் மற்றும் கான்கிரீட் பெயர்ந்து உள்ளது.மழைக்காலத்தில் கட்டடத்தின் மேற்பகுதியில் இருந்து மழைநீர் ஓழுகுவதால் வகுப்பறையில் மழைநீர் தேங்கி விடுவதால் மாணவர்கள் அமர்ந்து படிக்க முடியாமல் சிரமப்பட்டனர்.இந்த பள்ளிக் கட்டடத்தை சீரமைக்க வேண்டும் அல்லது கட்டடத்தை அகற்றி அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என, அப்பகுதியினர் ஒன்றிய நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.நடவடிக்கை எடுக்காததால், மாணவர்கள் அச்சத்துடன் கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. திருவள்ளூர் கலெக்டர் பார்வையிட்டு, பள்ளிக் கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12-Feb-2025