விபூதீஸ்வரர் கோவிலில் மே 4ல் கும்பாபிேஷகம்
கடம்பத்துார்:கடம்பத்துார் ஊராட்சி வெண்மனம்புதுார் பகுதியில் அமைந்துள்ளது சுகந்த குந்தலாம்பாள் சமேத விபூதீஸ்வரர் கோவில். இங்கு மே 4ம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது.முன்னதாக 2ம் தேதி காலை 9:00 மணிக்கு கணபதி பூஜையும், தொடர்ந்து கணபதி, லட்சுமி, நவக்கிரஹக ஹோமங்களும் மாலை 5:30 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலியும் முதல் கால யாக பூஜையும் நடக்கிறது.தொடர்ந்து 4ம் தேி காலை 8:00 மணிக்கு சுவாமி அம்பாள் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.இதே போல் கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாளநகர் பகுதியில் அமைந்துள்ளது வலம்புரி விநாயகர் கோவில். இங்கு வரும் 4ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. முன்னதாக 3ம் தேதி கோ பூஜையும், தொடர்ந்து கணபதி, லட்சுமி, நவக்கிர ஹோமமும் நடக்கிறது.மாலை விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம் மற்றும் முதல்கால யாகசாலை பூஜை நடக்கிறது. 4ம் தேதி காலை 7:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், தொடர்ந்து மகா பூர்ணாஹூதி, கடம் புறப்பாடு நடக்கிறது.காலை 10:15 மணிக்கு மகா கும்பாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடக்கிறது.