உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பைக் விபத்தில் வக்கீல் பலி

பைக் விபத்தில் வக்கீல் பலி

திருத்தணி:திருத்தணி அருகே, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதி வக்கீல் பலியானார். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த பராஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் குமார், 55. வக்கீல். இவர் நேற்று காலை தன் மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் திருத்தணி சென்றார். திருத்தணி நகரம் குமாரகுப்பம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் மீது, இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளனாது. இதில் கணவன், மனைவி துாக்கி வீசப்பட்டனர். குமார் பலத்த காயங்களுடன் இறந்தார். சுதாவை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்க பெற்று சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை