உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புதிய வகுப்பறை கட்ட அடிக்கல்

புதிய வகுப்பறை கட்ட அடிக்கல்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பெண்கள் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், 2.72 கோடி ரூபாய் செலவில் புதிய வகுப்பறை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கும்மிடிப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறை தட்டுப்பாடு நிலவி வருகிறது. புதிதாக எட்டு வகுப்பறை மற்றும் இரு ஆய்வு கூடங்கள் கொண்ட மூன்று தள கட்டடம் கட்ட, நபார்டு திட்டத்தின் கீழ், 2.72 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் ஷகிலா அறிவழகன், துணை தலைவர் கேசவன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை