உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / லிப்ட் மெக்கானிக் வெட்டிக் கொலை சின்னம்பேடு கிராமத்தில் பரபரப்பு

லிப்ட் மெக்கானிக் வெட்டிக் கொலை சின்னம்பேடு கிராமத்தில் பரபரப்பு

கும்மிடிப்பூண்டி:ஆரணி அடுத்த சின்னம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட பேட்டையைச் சேர்ந்தவர் ராஜா மகன் சங்கர், 30; திருமணமாகாதவர்.போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் 'லிப்ட்' தயாரிப்பு நிறுவனத்தில், மெக்கானிக்காக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்துள்ளார்.இவர், நேற்று காலை சின்னம்பேடுபேட்டை ஏரிக்கரை பகுதியில், தலையில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த ஆரணி போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சீனிவாச பெருமாள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். ஆரணி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்த நிலையில், ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., சாந்தி தலைமையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நேற்று முன்தினம் மாலை, கிராமவாசிகள் சங்கரை பார்த்த நிலையில், அன்றிரவு கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஏரிக்கரையோரம் சங்கரின் இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.மொபைல்போனில் பதிவான அழைப்புகளை ஆய்வு செய்து, முன்விரோதம் காரணமாக நடந்த கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.இந்த கொலை சம்பவம், சின்னம்பேடு கிராமத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை