மேலும் செய்திகள்
மதுபாட்டில் கடத்தல் எஸ்.பி., சோதனை
07-Apr-2025
திருத்தணி:திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் இருந்து, அதிகளவில் மதுபாட்டில்கள் வாங்கி, கிராமங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி., ஸ்ரீனிவாசா பெருமாள் உத்தரவுப்படி, ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார் நேற்று கே.ஜி.கண்டிகை டாஸ்மாக் கடை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த நபரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். வாகனத்தில் 25 மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர், அகூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி,70 என, தெரிய வந்தது. சுப்பிரமணியை கைது செய்த போலீசார், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
07-Apr-2025