உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாராயம் கடத்தியவர் கைது

சாராயம் கடத்தியவர் கைது

திருத்தணி:ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் இருந்து சாராயம், தமிழக எல்லையான பொன்பாடி சோதனை சாவடி வழியாக திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் பொன்பாடி சோதனை சாவடியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் இருசக்கர வாகனத்தில் நகரியில் இருந்து திருத்தணி நோக்கி வந்தவரை போலீசார் நிறுத்தி சோதனை செய்த போது, 3 லிட்டர் சாராயம் கடத்தி வந்தார். திருத்தணியை சேர்ந்த மணிகண்டன், 38 என்பவரை போலீசார் கைது செய்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ