மேலும் செய்திகள்
மதுபாட்டில்கள் விற்ற பெண் கைது
24-Aug-2025
திருத்தணி, இரு சக்கர வாகனத்தில் மதுபாட்டில்கள் கடத்தி வந்து விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். திருத்தணி நகரத்தில் மதுபாட்டில்கள் கடத்தி அதிகளவில் விற்பனை செய்து வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருத்தணி போலீசார் நேற்று திருத்தணி- அரக்கோணம் சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஸ்கூட்டியில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். வாகனத்தில், 12 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தும், டாஸ்மாக் கடையில் மொத்தமாக வாங்கி வந்து, திருத்தணி பகுதியில், கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. திருத்தணி எம்.ஜி.ஆர். நகர் சேர்ந்த வினோத்,25 என்பவரை கைது செய்த போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
24-Aug-2025