லாரி டயர் வெடித்து மைய தடுப்பில் மோதியது
திருவொற்றியூர், எண்ணுாரில் இருந்து கன்டெய்னர் லாரி நேற்று காலை, சென்னை துறைமுகம் நோக்கி சென்றது. ஓட்டுநர் சுப்பன், 54 என்பவர் லாரியை ஓட்டிச் சென்றார். எண்ணுார் விரைவு சாலை, எல்லையம்மன் கோவில் சிக்னல் அருகே சென்றபோது, திடீரென கன்டெய்னர் லாரியின் முன்சக்கர டயர் வெடித்து, மையத் தடுப்பில் மோதியது. ஓட்டுநர் காயமின்றி தப்பினார்.வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார், ராட்சத கிரேன் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தினர்.